கால அளவு: 149 நிமிடங்கள்
வெளியீடு: 12 நவம்பர் 2020
சினிமா வகை: அதிரடி நாடகம்
விமர்சகர் மதிப்பீடு: 4/5
கதைச்சுருக்கம்:
வானமே எல்லை (In english: Simply fly) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, ஏர் டெக்கான் நிறுவனர் மற்றும் ஓய்வு பெற்ற இந்திய ராணுவ தளபதியுமாகிய கோ.ரா. கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கியதே இத்திரைப்படம்.
திரைவிமர்சனம்:
சுதா கொங்கரா “இறுதிச்சுற்று” திரைப்படம் மூலம் தனது தனித்தன்மையை பதிய வைத்தவர். அவர் தனக்கே உரிய பாணியில் இருந்து சற்றும் விலகாமல் மிகவும் ஆழமான திரைப்படத்தை தந்துள்ளார்.
உண்மை கதையை மையப்படுத்தி எடுத்திருந்தாலும் அதில் ரசிக்கும் வண்ணம் பல காட்சிகளையும், எதார்த்தமான வசனங்களையும், மிகவும் கச்சிதமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்தது மிகப்பெரிய வலுவாகும்.
சூர்யா – வின் முழு வீரியமான நடிப்பை வெளிக்கொண்டு வர தெரிந்த இயக்குனர்கள் மிகச் சிலரே. இதில் சுதா கொங்கரா இதுவரை கண்டிராத சூர்யாவின் எதார்த்தமாக நடிப்பை உணர்ச்சிமிக்க காட்சிகளிலும் மிகவும் அழகாக வெளிக்கொண்டு வர செய்திருப்பார். சூர்யாவின் நடை, நடிப்பினில் வெளிப்படுத்தும் செய்கைகள் என அனைத்தும் கதாபாத்திரத்துடன் ஒன்றி அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.
அபர்ணா பாலமுரளி – இன் நடிப்பு அனைவராலும் மெச்சும் வண்ணம் அமைந்துள்ளது. திமிரும் ஒருவித அழகே என்பதை நமக்கு நினைவூட்டி சென்றிருப்பார், அவரின் இறுமாப்பை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் அவரின் இயல்பான நடிப்பினால்.
பரேஜ் ராவல், ஊர்வசி, மோகன் பாபு, விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார், கருணாஸ் ஆகியோரின் நடிப்பும் கன கச்சிதம்.
ஜி.வி. பிரகாஷ் – இன் இசை பின்னணியிலும், பாடல்களிலும் நம்மை கவர்ந்தே கதையோடு ஒன்றி பயணித்திட உதவுகிறது.
“உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்ற பழமொழியை தகர்த்தெறிந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கண்முன் நிறுத்தி, இளைஞர்கள் மற்றும் தனது கனவை எப்பேர்பட்டாவது நிறைவேற்றத் துடிக்கும் அனைத்து சராசரி மனிதர்கள் என எல்லா தரத்தினருக்கும் ஒரு முன்னோடியாக விளங்குகிறது இக்கதை.
“ஏழை என்றுமே ஏழையாக தான் இருக்க வேண்டும்” என்று நினைக்கும் பல செல்வ செழிப்பானவர்களின் நினைவை மாற்றி அமைத்து எல்லோரும் சமமே, எல்லாருக்கும் அனைத்தும் பொதுவே என்ற கருத்தினை முன் வைத்திடும் இத்திரைப்படம் கூட செல்வர்களால் மட்டுமே கண்டு களித்திடும் அமேசான் பிரைம் (Amazon Prime) – இல் வெளியிட்டது சற்றே வருத்தம் அளிக்கிறது.
நமது கனவுகளை ஊக்குவித்திடும் படியான வரலாறாய் தனது வாழ்க்கையை மாற்றிய ஒரு உண்மையான சூரரைப் போற்றிடும் வண்ணம் அமைந்த இத்திரைப்படத்தை தவறாமல் காணுங்கள்.
உணர்வூக்கம் அளித்திடும் நல்ல திரைக்கதைகளை ரசிப்போருக்கு இத்திரைப்படத்தை பரிந்துரைக்கிறேன்.





Please keep the entire review in English let’s reach out!
ReplyDelete