Friday, October 22, 2021

லிப்ட் (Movie Review)

 


திரைப்படம்: லிப்ட் (Lift)

மொழி: தமிழ்

வெளியீடு: 1 அக்டோபர் 2021

கால அளவு: 134 நிமிடங்கள்

சினிமா வகை: திகில் (Horror)

விமர்சகர் மதிப்பீடு: 3.3/5



கதைச் சுருக்கம்:


குரு மற்றும் ஹரிணி இருவருக்கும் சாதாரணமாக வேலை பார்க்கும் நாள் அசாதாரணமாகவும் அச்சம் ஊட்டும் வகையிலும் மாறி அவர்களின் அலுவலகத்தை விட்டே வெளியேறிட இயலாத நிலை நேரிடுகிறது. இவற்றில் இருந்து அவர்கள் மீண்டார்களா என்பதே இத்திரைப்படத்தின் கதை. 


மதிப்பாய்வுரை:


லிப்ட் திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம். இந்த திரைப்படம் Disney + Hotstar இல் நேரடியாக வெளியிடப்பட்டது.


குரு (கவின்) – புதிதாக இடமாற்றப் பட்டு அணி தலைவராக டெல்டா திட்டப்பணிக்கு (TL of Delta Project) நியமிக்கப்படுகிறார். குருவின் திமிரு மிகுந்த குணம் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. கவின் கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்துள்ளார். கதைக்கான கட்சிதத் தேர்வென்றே கவினை சொல்லலாம்.


ஹரிணி (அமிர்தா ஐய்யர்) – மனிதவள மேலாளராக (HR Manager) நடித்துள்ளார். ஹரிணியின் துரு துரு இயல்பு நன்கு பொருந்தியுள்ளது. அமிர்தாவின் நடிப்பு கணக்கச்சிதம். தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி உள்ளார்.


கதையில் பல காட்சிகள் யூகிக்க முடியாத அளவுக்கு மிகவும் வித்தியாசமாக அமைத்துள்ளனர்.


எழுத்து மற்றும் இயக்கத்தைப் புது முகமான வினீத் வரப்பிரசாத் மிக சிறந்த முறையில் செய்துள்ளார். அவரின் அறிமுகப் படம் என்பதை நம்பும் வண்ணம் இல்லாமல் நிறைய திரைப்படங்கள் இயக்கிய அனுபவசாலி இயக்குநர்களுக்கு இணையாக ஒரு திரைப்படத்தை நமக்கு தந்துள்ளார்.


இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் இன் இசை கதையோடு நன்கு திகிலூட்டும் வண்ணம் அமைந்துள்ளது.


இத்திரைப்படத்தை விறுவிறுப்பான கதைக்களத்தை ரசிப்பவருக்கும், திகில் திரைப்பட ரசிகர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.



"Lift" trailer

No comments:

Post a Comment

If you have any doubts, please let me know.