பெண்குயின்

மொழி: தமிழ்,தெலுங்கு, மலையாளம்
கால அளவு: 132 நிமிடங்கள்
வெளியீடு: 19 ஜூன் 2020
சினிமா வகை: மர்மம், பரபரப்பூட்டும் திரைப்படம் (Thriller film)
விமர்சகர் மதிப்பீடு: 2.4/5
கதைச்சுருக்கம்:
ரிதம் (கீர்த்தி சுரேஷ்) மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி, இரண்டாவது குழந்தையைப் பெறப்போகிறார். அப்போது அவருக்கு வரும் கனவுகளால் அதிர்ச்சியடைகிறார்; அதில் ஒரு குடை மனிதன் தன் தொலைந்த மகனுக்கு தீங்கு விளைவிப்பதைக் காண்கிறாள்.
திரைவிமர்சனம்:
வழக்கத்திற்கு மாறாக தமிழ் திரையுலகில் வேறுபட்ட கதைக்களத்தை உருவாக்கியதற்கே அறிமுக இயக்குனரான “ஈஷ்வர் கார்த்திக்"-ஐ பாராட்டிட வேண்டும்.
உச்சக் கட்ட காட்சிகளிலும் கொடைக்கானல் மற்றும் ஊட்டியின் அழகினை நம்மை வசீகரிக்க செய்தமைக்கு ஒளிப்பதிவாளர் “கார்த்திக் ஃபலானி” க்கு கைத்தட்டிட வேண்டும்.
கதாபாத்திரங்களாக ரகு (லிங்கா), கௌதம் (மாதம்பட்டி ரங்கராஜ்), அஜய் (மாஸ்டர் அத்வைத்) ஆகியவர்களை தேர்வு செய்தது கணகச்சிதம். முக்கியமாக டேவிட் (மதி)-ஐ மருத்துவ கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தது மிகவும் பாராட்டுக்குரியது.
“கேட்கப்படாத சில கேள்விகள் தானே நாம தீர்க்கமுடியாத புதிராய் மாறிடுது”
கீர்த்தி சுரேஷ் நடித்த “நடிகையர் திலகம்” திரைப்படத்தினில் தந்த நடிப்பினைப் பாதியேனும் இப்படத்திற்கு தந்திருக்கலாம். மர்ம வகை திரைப்படத்தினில் பயத்தினைப் பார்வையாளர்களுக்கு தனது நடிப்பினால் தந்திட தவறியிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன்-இன் இசை பாதிப் படத்திற்கு வலுவாகவும் மீதி படத்தினில் தென்படாமலும் போயிருக்கின்றது.
நாய் சைரஸ் (மேடி)- இன் நடிப்பு கதைக்கு மிகப்பெரிய வலுவாகும். என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமுமாகும்.

கதையின் முதல் பாகம் சிறப்பாக அமைந்திருந்தாலும், மிக முக்கிய இடங்களில் கதையின் சுவாரசியமும், விறுவிறுப்பும் குறைந்துள்ளது.
கதையின் திருப்புமுனையும் திருப்தியளிக்கவில்லை.
நல்ல கதைக்கு முழு உயிர் தர தவறியிருக்கிறார் இயக்குனர்.
தாய்மையின் அன்பு அளவிட முடியாது என்பதை பதியவைக்க முயற்சித்திருக்கிறது “பெண்குயின்” திரைப்படம்.
மெதுவாக நகர்கிற, மர்ம மற்றும் பரபரப்பூட்டும் திரைப்படங்களை விரும்புவோருக்கு இப்படத்தை பரிந்துரைக்கிறேன்

Nee ahru kannu keerthy suresh chithi ponna.. appo review chellathu chellathu..
ReplyDelete